Read Story
ஈரானின் இராணுவம் அமைதியாக இருக்க தாக்குதல் நடத்துவது யார்?
புரட்சியை ஏற்படுத்துவதை விட அதை பாதுகாப்பதே கடினமான பணி. பொதுவாக, ஒரு நாட்டை பாதுகாக்க இராணுவத்தை கட்டமைப்பார்கள். இங்கே புரட்சியை பாதுகாக்க மற்றொரு படை கட்டமைக்கப்பட்டது. (Islamic Revolutionary Guard Corps – IRGC) ‘இஸ்லாத்தின் வீரர்கள்’ என்று கொமைனி வர்ணித்தார். நாட்டின் இராணுவத்திற்கு இணையான படை என்று கூறப்பட்டாலும் நாட்டின் அதிபரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படாமல் சுப்ரீம் லீடர் கட்டுப்பாட்டின் கீழ் இந்த படை செயல்படுகிறது. புரட்சிக்கு பின்னர் அதி உயர் தலைவராக பதவியேற்ற ஆயத்துல்லாஹ் கொமைனியின் திட்டத்தில் உதயமானதே இந்த படை என்று கூறப்படுகிறது. IRGC-யில் மொத்தம் இரண்டு இலட்சம் படையினரும் ஆறு இலட்சம் ரிசர்வ் படையினரும் உள்ளதாக கூறப்படுகிறது. இராணுவத்தை போன்றே தரைப்படை, விமானப்படை, கப்பல்படை என முப்படைகளை IRGC கொண்டுள்ளது பேலிஸ்டிக் ஏவுகணை திட்டம், அணு சக்தி திட்டம், ஹிஸ்புல்லாஹ் போன்ற வெளிநாட்டு படைகளுடன் தொடர்பு ஆகிய முக்கிய விவகாரங்களை IRGC கவனித்து வருகிறது. -Riaz Ahamed
